விலை குறைந்தது சியோமி போகோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Last Updated: வியாழன், 21 மார்ச் 2019 (16:44 IST)
சியோமியின் துணை பிராண்ட் போகோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், சியோமி நிறுவனம் போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு குறுகிய கால சிறப்பு தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. 
 
எம்ஐ.காம் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் போகோ எப்1 ஸ்மார்ட்போனை சலுகையுடன் வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீல் புளு, கிராஃபைட் பிளாக், ரோஸோ ரெட் உள்ளிட்ட ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
 
ரூ.22,999 மதிப்புள்ள போகோ எப்1 ஸ்மார்ட்போன், தற்போது ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.20,999-க்கு விற்கப்படுகிறது. இந்த சலுகை வரும் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் இருக்கும். 
 
போகோ எப்1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# டிஸ்ப்ளே 6.18 இன்ச், பிராசசர் Qualcomm® Snapdragon™ 845 
# டூயல் சிம், ஆண்ட்ராய்டு 9 பை 
# 6 ஜிபி ராம்,  128 GB மெமரி 
# முன்புற கேமரா 20 மெகா பிக்சல், பின்புற கேமரா 12 மெகா பிக்சல், 5 மெகா பிக்சல் 
# பேட்டரி 4,000 mAh


இதில் மேலும் படிக்கவும் :