புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 பிப்ரவரி 2019 (14:29 IST)

மார்க் தி டேட்... 5ஜி ஸ்மார்ட்போனை களமிறக்கும் சியோமி!!!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சியோமி நிறுவனம், இம்மாதம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவை போட்டுள்ளது. 
 
ஆம், வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3.00 மணி) புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாம். இது  Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
அதாவது, சியோமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனை இப்போது வரும் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்க கூடும் என தெரிகிறது. சியோமி நிறுவம 2019 ஆம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என முன்னர் அறிவித்ததும் கவனிக்கப்பட வேண்டியவையே. 
 
இது இருக்க இன்னொரு புறம் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 X 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.