புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (13:46 IST)

போட்டிக்கு வராத ஜியோ, போண்டியான ஏர்டெல்: நம்பர் 1 வோடபோன்!!

ஏர்டெல் நிறுவனம் 3ஜி சேவையை வழங்கும் வேகத்தில் பின்தங்கி 3 வது இடத்தை பிடித்துள்ளது என டிராய் தெரிவித்துள்ளது. 
 
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முறையான சேவை, இண்டர்நெட் வேகம் ஆகியவை குறித்து ஆராய்ந்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. 
 
அந்த வகையில் 3ஜி நெட்வோர்க் சேவை சிறப்பாக வழங்கும் நிறுவனம் எதுவென்று தெரிவித்துள்ளது. 4ஜி வந்த பிறகு 3ஜி இணைய சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனினும் 3ஜி பயனபடுத்துவோரை வைத்து இந்த தகால் வெளியாகியுள்ளது. 
ஜியோவில் 3ஜி நெட்வோர்க் கிடையாது. எனவே, அந்நிறுவனம் போட்டியிலேயே இல்லை. மீதம் உள்ள நெட்வொர்க்கை பொருத்த வரை 2.5 Mbps வேகத்தில் வோடபோன் 3ஜி சேவையில் முதல் இடத்தில் உள்ளது. 
 
வோடபோனை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் 2.4 Mbps வேகத்தில் சேவையை வழங்கி பிஎஸ்என்எல் உள்ளது. 2.3 Mbps வேகத்தில் சேவை வழங்கி ஏர்டெல், ஐடியா ஆகியவை அடுத்தடுத்து இடங்களிலும் உள்ளது. 
ஏர்டெல் நிறுவனம் 3ஜி சேவையில் எதிர்பார்க்காத விதமாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. விரைவில் ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தப்பட உள்ளது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.