செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2019 (13:06 IST)

ஒன்லி 2 ருபீஸ்... ஏர்டெல்லை முடிக்க கட்டம் கட்டிய வோடபோன்!!

வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. இந்த சலுகை ஏர்டெல்லுக்கு போட்டியாக வழங்கப்பட்டுள்ளது. 
 
ஆம், வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ரூ.599-க்கு வழங்கப்படும் இந்த சலுகையில் 6 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மாதம் 300 எஸ்எம்எஸ்,  நேரலை டிவி, திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை வோடபோன் பிளே செயலி மூலம் இயக்கும் வசதி உள்ளிட்டவை 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
 
வோடாபோனின் இந்த சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.597 பிரீபெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் சலுகையில் 6 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சலுகை, ஏர்டெல் டி.வி. சந்தா உள்ளிட்டவை 168 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
ஏர்டெல் திட்டத்தைவிட இரண்டு ரூபாய் கூடுதலாக வோடபோன் திட்டம் இருந்தாலும் வேலிடிட்டியும் மற்ற கூடுதல் சலுகைகளும் ஏர்டெல்லை விட வோடபோனில் அதிகம் வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் வோடபோன், ஏர்டெல்லின் ரூ.129 ரிசார்ஜ் திட்டத்திற்கு போட்டியாக தனது ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.