புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 ஜூலை 2019 (14:16 IST)

குறைந்த விலையில் டேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெல்!!

பாரதி ஏர்டெல் நிறுவனம், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, டேட்டாவை அள்ளிவழங்கும் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில், பல பயனாளர்களை கொண்டுள்ள நெட்வொர்க் நிறுவனமாகும். தற்போது ஏர்டேல் நிறுவனம் ரூ.148 விலையில் புதிய ப்ரீபெய்டு சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனாளர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கவுள்ளது.

இதற்கு முன் ஏர்டெலில், ரூ.145 டாக்டைம், 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்பட்டன. தற்பொது அறிவித்துள்ள ரூ.148 சலுகையில் பயனாளர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ்ஸுடன், ஏர்டெல் டி.வி. ஆப் மற்றும் ம்யூசிக் சேவையை இயக்குவதற்கான வசதியும் வழங்கப்பட உள்ளது.

மேலும் இச்சலுகையில் ஏர்டெல் டி.வி. செயலி மூலம் 350 க்கும் அதிகமான நேரலை சேன்னல்கள் மற்றும் பல திரைப்படங்களும், சின்னத் திரை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கும் வசதியும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த சலுகை, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் இந்த சலுகை மற்ற மாநிலங்களுக்கும் வழங்கப்படும் என்பது கூடுதல் தகவல்.