வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (11:44 IST)

ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தம்: பயனர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி சேவை நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளது. 
 
இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதலிடத்தில் உள்ள ஜியோவை சமாளிக்க ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இந்த முயற்சிகள் எதுவும் பெரிதாய் கைக்கொடுப்பதாய் தெரியவில்லை. 
 
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் 3ஜி சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக கொல்கத்தாவில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு... 
ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தப்பட உள்ளது. 3ஜி சேவைக்கு வழங்கப்படும் 900 MHz அலைக்கற்றையை அப்படியே 4ஜி சேவையை பலப்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால், 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்படும். 
 
வாடிக்கையாளர்கள் பலர் பேசிக் போன்களில் ஏர்டெல் 2ஜி சேவையை பயன்படுத்துவதால் 2ஜி சேவை நிறுத்தப்படாது. அதேபோல் 3ஜி சேவையை நிறுத்தப்படுவதால் பெரிய பாதிப்பு ஏற்படாது. 
 
மேலும், 3ஜி வாடிக்கையாளர்கள் குறைவாகவே உள்ளனர். அவர்கள் அப்படியே 4ஜி சேவைக்கு மாறிவிடுவார்கள் என ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.