திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (11:38 IST)

சரிவில் ஜியோ... தலைத்தூக்கும் வோடபோன்... நம்பர் 1 யார்?

2019 மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைய வேகம் குறித்து டிராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர் இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் மட்டுமே புதிதாக வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக டிராய் அறிக்கையில் வெளியிட்டிருந்தது. தற்போது இணைய வேகம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
 
அறிக்கையின்படி, மார்ச் 2019-ல் சராசரியாக 22.2Mbps வேகத்தில் இணைய வசதியை ஜியோ வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. ஜியோ வழங்கிய டேட்டா வேகம் ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகமாகும். 
அடுத்து, டவுன்லோட் வேகத்தை பொருத்த வரை ஜியோ மீண்டும் முதலிடத்திலும், அதன் பின்னர் ஏர்டெல் அதை தொடர்ந்து வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கல் உள்ளன. பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடும் போது வோட போன் மற்றும் ஐடியா டவுன்லோட் வேகம் அதிகரித்துள்ளதாம். 
 
அப்லோட் வேகத்தை பொருத்தவரை வோடபோன் முதலிடம் பிடித்திருக்கிறது. வோடபோன் அப்லோடு வேகம் 6Mbps ஆகவும்,  ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அப்லோடு வேகம் முறையே 5.5Mbps மற்றும் 3.6Mbps ஆகவும், ஜியோவின் அப்லோடு வேகம் 4.6Mbps ஆகவும் இருந்துள்ளது. 
இதற்கு முன்னர் டிராய் வெளியிட்ட இணைய வேக அறிக்கையில் கூட ஜியோ நான்காம் இடத்தில்தான் இருந்தது. அனைத்திலும் முதலிடத்தில் உள்ள ஜியோ அப்லோட் வேகத்தில் மட்டும் மற்ற நிறுவனக்களை வீழ்த்தி முன்னேற முடியாமல் இருக்கிறது.