1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (13:28 IST)

ஏர்டெல் கோட்டையை நொருக்கிய ஜியோ; ஆனா இதான் நம்பர் 1!!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து தனது சேவையை துவங்கியது. துவக்கத்திலேயே இலவசங்களை வாரி வழங்கியது. 
 
ஆம், வாய்ஸ் கால் முதல் டேட்டா வரை அனைத்து சேவைகளையும் இலவசமாகவே தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இதில் அனைத்து முக்கியமான பிரைம் சேவைகளும் அடக்கம். 
 
இதுபோன்ற பல இலவச சலுகைகள் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கலின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. மற்ற போட்டி நிறுவனங்கள் அனைத்தும் பல சலுகைகளை வழங்கியும் ஜியோவின் வளர்ச்சியை சற்றும் தடுக்க முடிவில்லை. 
அதோடு, வருமானத்தையும் வாடிக்கையாளர்களையும் இழக்க துவங்கின மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள். இப்போது விஷயம் என்னவெனில், ஜியோவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 30.6 கோடியாக உயர்ந்துள்ளது. 
 
அதாவது, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் ஏர்டெல் நிறுவனத்தை மூன்றாம் இடத்திற்கு தள்ள ஜியோ நிறுவனம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்கலின் எண்ணிக்கை 28.4 கோடியாகும். 
ஏர்டெல் நிறுவனம் பட ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருந்த நிலையில், இப்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதில் முதல் இடத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் உள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்ததால் அந்நிறுவனம் 38.7 கோடி வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தில் உள்ளது.