வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 மே 2020 (13:28 IST)

வோடபோன் ஐடியாவின் பிரீபெயிட் டபுள் டேட்டா ப்ளான்: விவரம் உள்ளே...!!

வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
முன்னதாக ரூ. 399 மற்றும் ரூ. 599 சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
இந்த இருமடங்கு டேட்டா டெல்லி, மத்திய பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.
 
ரூ. 299 ப்ளான்: 
ரூ. 299 விலையில்  4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
 
ரூ. 449 ப்ளான்: 
ரூ. 449 விலையில்  4 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ரூ. 699 ப்ளான்: 
ரூ. 699 விலையில் 4 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.