1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (12:12 IST)

BSNL-க்கு கோடிக் கணக்கில் செடில்மெண்ட் பாக்கி வைத்துள்ள Jio!

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.167.97 கோடியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிலுவைக் கட்டணமாக வைத்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
சமீபத்தில் மாநிலங்களவையில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒருபோதும் மூடப்படாது என தெரிவித்தார். 
 
மேலும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கின் தொலைத்தொடர்பு கோபுரங்களை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு இதன் மூலம் வருவாய் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
அதன் படி, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருக்கும் 13,146 மொபைல் டவர்களில் ரிலையன்ஸ் 8,363 டவர்களையும், ஏர்டெல் 2,799 டவர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 1,792 டவர்களையும் பயன்படுத்தி வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.167.97 கோடி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிலுவைக் கட்டணம் வைத்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.