திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2018 (14:31 IST)

மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்ட ஜியோ: அசத்தும் வோடபோன், ஐடியா...

மை ஸ்பீடு என்னும் செயலி இண்டர்நெட் வழங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அப்லோட் மற்றும் டவுன்லோட் வேகத்தை கணக்கிட்டு வெளியிடுகின்றன. அந்த வகையில் நவம்பர் மாத பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
அப்லோடு வேகத்தை பொருத்த வரை வோடபோன் நிறுவனம் ஐடியாவை பின்னுக்கு தள்ளி நொடிக்கு 6.9 எம்பி வேகத்தை பதிவு செய்திருக்கிறது. ஐடியா நொடிக்கு 6.6 எம்பி வேகமும், ஜியோ நொடிக்கு 4.9 எம்பி மற்றும் ஏர்டெல் நொடிக்கு 4.0 எம்பி வழங்கியுள்ளன. 
 
கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி ஐடியா நொடிக்கு 7.1 எம்பி வழங்கி்யது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் முதலிடத்தை பிடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது. 
 
ஆனால், டவுன்லோடு வேகத்தை பொருத்த வரை ஜியோ 11-வது மாதமும் தொடர்ச்சியாக முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் வோடபோன் உள்ளது. மூன்றாம் இடத்தில் ஏர்டெல் அதன் பின்னர் ஐடியா உள்ளது. 
 
இந்த செய்திகள் அனைத்தையும் சேகரித்து மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.