வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 26 மே 2019 (15:47 IST)

விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்(ஸ்)!

விவோ நிறுவனம் தனது இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. 
 
விவோ நிறுவனம் தனது வி15 மற்றும் வை17 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்களின் மீதுதான் தற்போது விலை குறைப்பை அறிவித்துள்ளது. 
 
விவோ வி15 ஸ்மார்ட்போன் ரூ.23,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
விவோ வை17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.17,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.