திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2019 (13:14 IST)

ஜியோ வழங்கும் ரூ.10,000 ஆஃபர் வேண்டுமா? இத பண்ணுங்க...

சீன நிறுவனமனாக விவோ பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் சமீபக்த்தி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விறபனையில் அசத்தியது. 
 
இப்போது விவோ வி15 ஸ்மார்ட்போன் விற்பனையை இன்று முதல் துவங்கியுள்ளது. விற்பனையை பல சலுகைகளுடன் அமர்களமாக துவங்கியுள்ளது. கடந்த வாரம் முன்பதிவு துவங்கிய நிலையில், இன்று விற்பனைக்கு வந்துள்ளது.  
 
அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால் மற்றும் சில பிரத்யேக ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.23,990 என்று நிர்ணயிக்கப்பட்டாலும், பல ஆஃபர்கள் இந்த ஸ்மார்ட்போன் மீது அறிவிக்கப்பட்டுள்ளது.  
விவோ வி15 மீதான சலுகைகள்: 
1. ஆரம்ப சலுகையாக விவோ வி15 வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.10,000 மதிப்பிலான சலுகைகள்.
2. எஸ்பிஐ வங்கியின் கிரேடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் விவோ வி15 வாங்கினால், 5% உடனடி தள்ளுபடி 
3. ரூ.2000 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், வட்டியில்லா இம்ஐ சேவையும் வழங்கப்படும். 
விவோ வி15 சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் கொரிலா கிளாஸ் டிஸ்ப்ளே, Octa-Core MediaTek Helio P70 12nm பிராசசர்
# Android 9.0 பை, 6 ஜிபி ராம், 128 ஜிபி இன்பீல்ட் மெமரி, 256 ஜிபி எஸ்டி கார்டு மெமரி 
# டூயல் சிம் ஸ்லாட், ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார், ஜிபிஎஸ், நேவிகேஷன் சென்சார் 
# மூன்று கேமரா: 12 மெகா பிக்சல் முன்புற கேமரா, 45 மெகா பிக்சல் பின்புற கேமரா, 32 மெகா பிக்சல் பாப் அப் கேமரா
# 4000mAh பேட்டரி திறன்