அந்த லக்கி ஆள் நீங்களா? வீ மெசேஜ் வந்திருச்சானு பாருங்க... !!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 28 செப்டம்பர் 2020 (13:13 IST)
விளம்பர நோக்கத்தில் வீ தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாபை வழங்குவதாக் அறிவித்துள்ளது.   
 
இந்தியாவில் ஜியோவின் வருகையை தொடர்ந்து பல நெட்வொர்க் நிறுவனங்கள் பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு நிகராக சலுகைகள் வழங்கி தாக்குப்பிடித்து வருகிறது. இந்நிலையில் சரிவை சந்தித்த வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் ஒன்றிணைந்த வோடபோன், ஐடியா நிறுவனத்தின் பெயர் வீ என மாற்றப்பட்டு புதிய லோகோவும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விளம்பர நோக்கத்தில் வீ தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாபை வழங்குவதாக் அறிவித்துள்ளது.   
 
தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த 1 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது வீ. இலவச டேட்டாவுக்கு தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு வி குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கிறது. இது எழு நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 


இதில் மேலும் படிக்கவும் :