திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (19:41 IST)

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு!

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டியில்சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் அவர்கள் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று உள்ளன என்பதும், ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்