1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Timeline extended for linking Aadhaar Number with Bank Number and Mobile Number

ஆதார், மொபைல் எண் இணைப்பு: நீட்டிக்கப்படுமா காலக்கெடு??

ஆதார் எண்
வங்கி கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதிக்கு தள்ளிபோகும் என்று தெரியவந்திருக்கிறது. 
 
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் சேவை துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ள நிலையிலும், மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 
 
இதையடுத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி என அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதியும், செல்போன் எண்ணுடன் இணைக்க பிப்ரவரி 6 ஆம் தேதியும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
139 பேருக்கு மரண தண்டனை, 146 பேருக்கு ஆயுள் தண்டனை: வங்காளதேசத்தில் பரபரப்பு!!