செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 4 நவம்பர் 2017 (19:46 IST)

ஆதார் எண்ணை இணைத்தால் மாதம் 12 டிக்கெட்; ஐஆர்சிடிசி அதிரடி சலுகை

ஆதார் எண்ணை இணைத்த பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் மாதம் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.


 

 
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி, ரயில் பயணிகள் தற்போது மாதம் 6 டிக்கெட்டுக்கு மேல் முன்பதிவு செய்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கு பயணிகள் தங்களது எண்ணை இணைத்து கொள்ள வேண்டும்.
 
இந்நிலையில் ஆதார் எண்ணை இணைத்த ரயில் பயணிகள் மாதம் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை அக்டோபர் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
 
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஆதார் எண் இணைப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஒருவர் முதல் ஆறு டிக்கெட் முன்பதிவு வரை ஆதார் எண் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
 
ஆறு டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்யும் பயணிகள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.