1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Stock Market Rebounds for Third Consecutive Day

பங்குச்சந்தை 3வது நாளாக உயர்வு.. படிப்படியாக மீண்டு வருவதால் முதலீட்டாளர்கள் நிம்மதி..!

share
கடந்த வாரம் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துக் கொண்டிருக்கிறது.

இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது,  முதலீட்டாளர்களுக்கு   மகிழ்ச்சி அளித்துள்ளது. சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 76,613 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 23,215 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ்,  பிரிட்டானியா, பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டார்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல், டாடா ஸ்டீல், கோடக் மகேந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது.

மாறாக, எச்டிஎப்சி வங்கி, டிசிஎஸ், ஸ்டேட் வங்கி, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, டைட்டான், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
About Writer
Siva