ரூ.10,000 வரை கேஷ்பேக்: மாற்றங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 8...
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் கடந்த ஆண்டு வெளியானது. இது மிட்நைட் பிளாக் மற்றும் மேப்பிள் கோல்டு என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது புதிதாக ஆர்சிட் கிரே நிறத்தில் புதிய கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி நோட் 8 விலை ரூ.67,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பேடிஎம் சார்பில் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் ஆன்லைன் வலைத்தளம் மற்றும் சாம்சங் ஆஃப்லைன் விற்பனையகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2960x1440 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் எக்சைனோஸ் 9 சீரிஸ் 8895 பிராசஸர்
# 6 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# ஆன்ட்ராய்டு 7.1.1 நௌக்கட், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7, f2.4 அப்ரேச்சர்
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 அப்ரேச்சர்
# வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
# 3300 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்