செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2018 (20:19 IST)

சியோமியை வீழ்த்த சாம்சங் புதிய திட்டம்

இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக வளர்ந்து சியோமியை வீழ்த்த சாம்சங் நிறுவினம் புதிதாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
சீன நாட்டைச் சேர்ந்த சியோமி நிறுவனம் பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு உலக ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
 
உலக சந்தையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் பிரபலமாக இருக்கும் சியோமியை வீழ்த்த திட்டுமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சியோமி போன்றே ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்ய பிரத்யேக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
சாம்சங் நிறுவனத்துக்கென்று தனி வாடிக்கையாளர்கள் இருந்தாலும் சாம்சங் இந்திய சந்தையில் முதலிடத்தை பிடிக்க போராடி வருகிறது.