1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (14:09 IST)

திணறடிக்கும் ஜியோ - சாம்சங் கூட்டணி: தீபாவளிக்கு புது இலக்கு!

பிரபல தொழில்தொடர்பு நிறுவனமான ஜியோ, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் உடன் இணைந்து புதிய இலக்கு ஒன்றை நிர்ணயித்து அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறதாம். 

 
ஐஓடி எனப்படும் இன்டர்நெட் ஆப் திங் அதாவது இணையவழி சேவை மூலம் போக்குவரத்து, வானிலை மற்றும் விவசாயம் சார்ந்த தகவல்களை இந்தியா முழுவதும் அளிக்க ஜியோ மற்றும் சாம்சங் திட்டமிட்டுள்ளதாம்.
 
ஜியோ சேவை துவங்கப்பட்டு 16 மாதங்களில் 16 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளநிலையில், இந்த புதிய திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 99% வாடிக்கையாளர்களை சென்றடைய  முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இலவச சேவை நிறுதப்பட்டு கட்டணங்கள் விதிக்கப்பட்டாலும் வாடிக்கையாளர்கள் பலர் ஜியோ சேவையை பயன்படுத்தி வருவதால் இந்த இலக்கு எளிது எனவும் ஜியோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.  
 
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்குள் நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகையில் 99 சதவீத மக்களைச் சென்றடைய ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. இத்தகவலை நிறுவனத்தின் தலைவர் ஜோதிந்திர தக்கார் தெரிவித்தார்.
 
இந்த புதிய திட்டம் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிகிறது. ஐஓடி மேம்பாட்டுக்கு மூன்றாம் தரப்பு நிறுவனங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.