1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 அக்டோபர் 2017 (10:48 IST)

ரூ.6,000 கோடி டெபாசிட்; 20,000 போலி நிறுவனங்கள்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவு என்ன??

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சுமார் 20,000 போலி நிறுவனங்கள் ரூ.6,000 கோடியை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.


 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 20,000 நிறுவனங்கள் ரூ.6,000 கோடி வரை வங்கிகளில் டெபாசிட் செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசு ஏற்கெனவே 2,00,000 நிறுவனங்களின் தொழில் அனுமதிகளை ரத்து செய்து அவற்றின் வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளது.
 
இதே போல், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 20,000 போலி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் அந்நிய முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் என கூறப்படுகிறது.