நாளை கந்தகஷ்டி: திருச்செந்தூர், திருப்போரூரில் உள்ளூர் விடுமுறை


sivalingam| Last Modified செவ்வாய், 24 அக்டோபர் 2017 (18:03 IST)
தமிழ்க்கடவுள் முருகனின் முக்கிய விழா கந்தசஷ்டி. திருச்செந்தூர் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நாளை சிறப்பு வழிபாடு நடத்தப்படும்


 
 
இந்த நிலையில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை திருச்செந்தூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகும்
 
அதேபோல் திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். திருப்போரூர் முருகன் கோவிலிலும் நாளை சூரசம்ஹாரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :