1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 25 அக்டோபர் 2017 (10:25 IST)

மெர்சல் விஜய்க்கு ஒரு கோடி ரூபாய் சவால் விட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள்

விஜய் மற்றும் மெர்சல் படக்குழுவினர்களுக்கு சட்டக்கல்லூரி மாணவர்களின் குழு ஒன்று ரூ.1 கோடி சவால் விட்டுள்ளது


 
 
சிங்கப்பூரில் இலவச மருத்துவம் அளிப்பதாக விஜய் மற்றும் மெர்சல் குழுவினர் உறுதி செய்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி அளிக்க சட்டக்கல்லூரி மாணவர்கள் குழு தயாராக இருப்பதாகவும், அதேபோல் நிரூபிக்க தவறினால் மக்களின் நலத்திட்டங்களுக்கு ரூ.1 கோடி மெர்சல் குழுவினர் அளிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் சவால் விட்டுள்ளனர்.
 
மேலும் இதுகுறித்து சட்டமாணவர்கள் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், 'தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் அரசுக்கு எதிராக மக்களை மெர்சல் குழுவினர் தூண்டிவிட்டுள்ளதாகவும், இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதால் விஜய் உள்பட் மெர்சல் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளான்ர். ஏற்கனவே இந்து மக்கள் கட்சி மெர்சல் படத்திற்கு எதிராக போலீசாரிடம் புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.