41.08 கோடியாக அதிகரித்த ஜியோ பயனர்கள் எண்ணிக்கை!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2.51 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான மூன்றாவது காலாண்டில் மட்டும் 2.51 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் நிதிநிலை அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்று இருக்கிறது.
டெலிகாம் சந்தையில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 15.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. அதாவது, 2020 ஆண்டு மட்டும் ஜியோ நிறுவனத்தில் சுமார் 4 கோடி பேர் இணைந்துள்ளனர். தற்போது ஜியோவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.08 கோடியாக இருக்கிறது.