புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (17:01 IST)

’ஜியோ’விலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு இலவசமாகப் பேசலாம் !

புத்தாண்டு அன்று 1ஆம் தேதி முதல் ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்கிற்கு இலவசமாகப் பேசலாம் என்று ரிலையன்ஸ் jio  நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரும் தொழில்நுட்பப் புரட்சியாக  இலவச நெட்வொர்க், இலவச அழைப்புகள் என கால்பதித்து மிக்ககுறுகிய காலத்திலேயே இந்தியாவில் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ள ஜியோ நெட்வொர்க் அவ்வப்போது, பல ஆஃபர்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், வரும் நாளை புத்தாண்டு முதல் பிற நெட்வொர்க்குகளுக்கு இலவசமாகப் பேசலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் தனது நெட்வொர்க்கிலிருந்து பிற நெட்வொர்க்கிற்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கிறது. எனவே நாளை முதல் இக்கட்டணம் இல்லாமல் இலவசமாக பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.