100% கேஷ்பேக்: ஜியோவின் ஓஹோ தீபாவளி ஆஃபர்!

Last Updated: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (13:40 IST)
தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், துணிக்கடை, மொபைல் நிறுவனக்கள் என அனைத்து அஃபர்களை வழங்க துவங்கியுள்ளன. 
 
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. 25 கோடி வாடிக்கையாளர்களை எட்டியுள்ள ஜியோ தீபாவளி ஆஃபரை படு ஜோராக வழங்கியுள்ளது. 
 
தீபாவளி ஆஃபரின் கீழ் அனைத்து பயனர்களுக்கு 100% உடனடி கேஷ் பேக் சலுகை வழங்கப்பட உள்ளது. தீபாவளி சலுகைகள் அக்டோபர் 18 முதல் நவம்பர் 30 வரை வழக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு வழங்கப்படும் கேஷ்பேக் கூப்பன் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.
 
100% கேஷ்பேக்: 
100% கேஷ் பேக் சலுகை ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.449, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களுக்கு பொருந்தும். 
 
அதோடு, பயனருக்கு மூன்று ரூ.500-க்கான கூப்பன் மற்றும் ஒரு ரூ.200-க்கான கூப்பன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :