புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 அக்டோபர் 2018 (15:26 IST)

போட்டா போட்டி சலுகைகள்: வாரி வழங்கும் நிறுவனங்கள்

சலுகை என்னும் சொல், ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்குள் நுழைந்தது முதல் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சலுகை வழங்கி வருகிறது. 
 
நேற்று வோடபோன் நிறுவனம், ரூ.279 விலையில் சலுகையை அற்வித்தது. இதில், 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
இதற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.289 பிரீபெயிட் சலுகை மாற்றி அமைத்து வழங்கியுள்ளது. அதாவது, இம்முறை இந்த சலுகையில் வேலிடிட்டி மற்றும் டேட்டா அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
 
4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் என அனைத்தும் 84 நாட்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, ஜியோ ரூ.399 விலையில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன்  அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1.5 ஜிபி டேட்டா சலுகை வழங்குவது குறிப்பிடத்தக்கது.