வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (16:04 IST)

வோடபோன் பிரீபெயிட் சலுகை: விவரம் உள்ளே

வோடபோன் நிறுவனம் ரூ.279க்கு பிரீபெயிட் சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த சலுகை ஜியோ மற்றும் ஏர்டெலுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  
 
வோடபோனின் புதிய ரூ.279 சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டிக்கு, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வழங்குகிறது. கூடுதலாக இந்த சலுகையில் 4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கபப்டுகிறது. 
 
இந்த சலுகை முதற்கட்டமாக கர்நாடகா மற்றும் மும்பை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்திய தொலைத்தொடர்பு துறையில் மற்ற நிறுவனங்கள் அனைத்தும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை ரூ.300-க்கும் குறைவான விலையில் இதுவரை வழங்கவில்லை. 
 
ஜியோவின் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட துவக்க விலை ரூ.348 என நிர்ணயம், அதேபோல் ஏர்டெல்லும் 300 ரூபாய்க்கு மேல்தான் கட்டனம் வசூலிக்கிறது. எனவே, வோடபோன் இந்த இரு நிறுவங்களுக்கு போட்டியாக ரூ.279-க்கு இந்த சலுகையை வழங்கியுள்ளது.