திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 28 ஜூன் 2020 (13:01 IST)

விலை உயர்ந்தது ரியல்மி ஸ்மார்ட்போன்!

ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீதான விலையை மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. 
 
ஆம், ரியல்மி சி3 ஸ்மார்ட்போனுடன் ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ரியல்மி நார்சோ 10ஏ 3ஜிபி + 32ஜிபி மெமரி வேரியண்ட் விலை முந்தைய ரூ.8499 இல் இருந்து தற்சமயம் ரூ. 8999 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 
 
ரியல்மி நார்சோ 10ஏ 4ஜிபி + 64ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 9999 விலையில் வெளியிடப்பட்டது.
 
ரியல்மி சி3 3ஜிபி + 32ஜிபி வேரியண்ட் ரூ. 7999 இல் இருந்து ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 8999 என மாற்றப்பட்டுள்ளது. 
 
4ஜிபி + 64ஜிபி வேரியண்ட் தற்சமயம் ரூ. 9999 என உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.