புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (16:43 IST)

அல்பமாய் செயல்பட்ட ஜியோ! அதையே பின்பற்றும் ஏர்டெல், வோடபோன்!!

ஜியோ மேற்கொண்ட நடவடிக்கை ஒன்று வாடிக்கையாளர்களுக்கு அசவுகரித்தை கொடுத்தாலும் மற்ற நிறுவனங்களும் அதையே பின்பற்றி வருகின்றன. 
 
இதுநாள் வரை அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் அவுட்கோயிங் கால்களுக்கான ரிங்கிங் நேரத்தை 45 விநாடிகளாக வைத்திருந்தது. ஆனால், சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரிங்கின் நேரத்தை அதிரடியாக் 20 விநாடிகளாக குறைத்தது.
 
ஆம், ஜியோ நம்பரில் இருந்து ஏர்டெல் நம்பருக்கு கால் செய்யும் போது 20 விநாடிகளில் கால் கட்டாகிவிடும். மிஸ்டுகாலை கண்டதும் ஏர்டெல் நம்பரில் இருந்து ஜியோ எண்ணிற்கு கால் செய்யப்படும் போது, ஏர்டெல் ஜியோவிற்கு IUC கட்டணம் செலுத்த வேண்டும். IUC என்பது Inter Connect Usage Charge. டிராய் விதிப்படி ஒரு நிமிடத்திற்கு 6 பைசா அளிக்க வேண்டும். 
இதனை ஏர்டெல் நிறுவனம் கடுமையாக எதிர்த்து டிராய்-க்கு புகார் கடிதம் ஒன்றை வழங்கியது. மேலும், ஜியோ தனது முடிவை மாற்றாவிட்டால் தாங்களும் ரிங்கிங் நேரத்தை குறைக்க நேரிடும் என ஏர்டெல் தெரிவித்திருந்தது. 
 
இதன் பின்னர் டிராய் அறிவுறுத்தலை ஏற்று ரிலையன்ஸ் ஜியோ தனது ரிங்கிங் நேரத்தை 20 விநாடிகளில் இருந்து 25 விநாடிகளாக அதிகரித்தது. இருப்பினும் ஜியோ செயலால் கடுப்பானது ஏர்டெல்.  
 
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது, தனது ரிங்கிங் நேரத்தை 24 விநாடிகளாக குறைக்க உள்ளோம் என டிராய்-க்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், வோடபோன் ஐடியா நிறுவனமும் அடுத்து தனது ரிங்கிங் நேரத்தை குறைக்கும் என எதிர்ப்பார்க்க்கப்படுகிறது.