வெறும் 699 ரூபாய்க்கு ஜியோ ஃபோன் வாங்கினால் 1500 ரூபாய்க்கு சலுகை!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 1 அக்டோபர் 2019 (14:48 IST)
தீபாவளியை முன்னிட்டு ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது அதிரடி சலுகையாக ஜியோ ஃபோன்களை 699 ரூபாய்க்கு குறைந்த விலையில் வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது.

இந்தியாவில் 4ஜி ஸ்மார்ட்ஃபோன்களை உபயோகிக்கும் மக்களை விட அதிகமாக சாதரண பட்டன் ஃபோன்களை உபயோகிக்கும் மக்கள் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு போன் செய்து பேசுவதற்கு மட்டுமே மொபைலை பயன்படுத்தும் இவர்கள் அதிகபடியான ரீசார்ஜ் கட்டணம் மற்றும் குழப்பமான மாத ப்ளான்களால் ஏகப்பட்ட குழப்பங்களை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் சாதாரண மக்களும் பயன்படுத்தும் விதத்தில் 1500 ரூபாய்க்கு ஜியோ நிறுவனம் இணைய வசதி கொண்ட முதல் பட்டன் ஃபோனை அறிமுகம் செய்தது. பழைய மொபைல்களை கொடுத்து எக்ஸ்சேஞ் செய்து கொள்பவர்களுக்கு 1000 ரூபாய்க்கும், புதிதாக வாங்குபவர்களுக்கு 1500 ரூபாய்க்கும் இந்த போன் விற்கப்பட்டது. மாதம் வெறும் 49 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் அன்லிமிட்டட் கால்கள் மற்றும் ஜியோ டிவி மூலமாக லைவ் டிவி சேனல்களையும் காண முடியும் என்பதால் இது அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் ஜியோபோனை மேலும் அதிக மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் எந்த வித எக்ஸ்சேஞ்சுகளும் செய்யாமலே ஜியோ ஃபோனை 699 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.ச் இந்த ஆஃபர் நவராத்திரி முதல் தீபாவளி வரை இருக்கும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தீபாவளி ஆஃபரில் ஜியோ ஃபோன் வாங்குபவர்களுக்கு மேலும் 699 ரூபாய் மதிப்பிலான இணைய சேவை மற்றும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஃபோன் வாங்குபவர்களுக்கு மொபைல் விலையில் 800 ரூபாய் கழிவும், 699 ரூபாய் ஆஃபரும் சேர்த்து மொத்தமாக 1500 ரூபாய் பணம் மிச்சமாகும். இதனால் பலர் இந்த ஆஃபரில் போன்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :