இளசு டூ பெருசு; ஒரே ரீசார்ஜில் மொத்தமாய் கொக்கி போட்ட ஏர்டெல்!

Sugapriya Prakash| Last Modified புதன், 25 செப்டம்பர் 2019 (10:21 IST)
ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜோடு 18 முதல் 54 வயதுடைய அனைவருக்கும் காப்பீடு திட்டத்தையும் வழங்கி வாடிக்கையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. 
 
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரூ.599 ரீசார்ஜ் திட்டத்தில் காப்பீடு திட்டத்தையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் பின்வருமாறு, 
 
ரூ.599 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதோடு இத்திட்டத்தில் ரூ.4 லட்சத்திற்கான காப்பீடு திட்டமும் வழங்கப்படுகிறது. 
ஏர்டெல் காப்பீடு 18 முதல் 54 வயதுடைய அனைவருக்கும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப காப்பீடு திட்டத்தின் நகல் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது இந்த திட்டம் தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த காப்பீட்டு திட்ட பயன்களை பெற ரூ.599-க்கு முதல் முறை ரீசார்ஜ் செய்து எஸ்எம்எஸ், ஏர்டெல் தேங்ஸ் அல்லது ஏர்டெல் ரீடெயிலர் மூலம் காப்பீடு சலுகையை பெற்றுக் கொள்ள வேண்டும். 


இதில் மேலும் படிக்கவும் :