என்ன பண்ணாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாது..
பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வந்தாலும், அதன் விலையில் மற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் எந்த பகுதியிலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஜிஎஸ்டி வரி மட்டும் விதிக்கப்படுவதில்லை, எனவே இந்தியாவிலும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து மதிப்பு கூட்டு வரியும் விதிக்கப்படும் என தெரிகிறது.
அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவந்தால் அதிகபட்ச வரியான 28% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுவதுடன், மாநில அரசுகளும் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரி விதிக்கக்கூடும்.
மதிப்புக் கூட்டு வரியுடன் அதிகபட்ச ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால் அது தற்பொழுதுள்ள வரிக்கு இணையாக இருக்கும். இதனால், தற்போது உள்ள விலைக்கும் ஜிஎஸ்டிக்குள் சேர்க்கப்பட்டதும் வரும் விலைக்கும் பெரிதாக மாற்ற இருக்காது என கூறப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது எரிபொருள் விலை உயர்வுக்கு தீர்வாக அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.