திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (11:33 IST)

4000 ஜிபி இன்டெர்னல் மெமரி: சாத்தியமா?

சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 128 ஜிபி அல்லது 256 ஜிபி வரையிலான இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்து 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட உள்ளது. 
 
ஆம், லெனோவோ வெளியிடும் இசட்5 ஸ்மார்ட்போனின் 4000 ஜிபி இண்டர்னல் மெமரி வழங்கப்பட உள்ளதாம். இதற்கு முன்னர் இந்த ஸ்மார்ட்போனில், ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பது தெரியவந்தது. 
 
தற்போது, 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இதனை கொண்டு 10 லட்சம் புகைப்படங்கள், 2000 ஹெச்டி திரைப்படங்கள் மற்றும் 1,50,000 பாடல்களை ஸ்மார்ட்போனில் சேமிக்க முடியும். 
 
இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், சுமார் 95% அதிகமான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிகிறது.  
 
லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்ஃபி கேமராவும், ஆடியோ வைப்ரேஷன் மூலமாக டிரான்ஸ்மிட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.