திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (12:46 IST)

ரூ.3399-க்கு ஸ்மார்ட்போன், ரூ.2600 கேஷ்பேக்: ஏர்டெல், அமேசான் கூட்டணி!

ஏர்டெல் மற்றும் அமேசான் இணைந்து ஸ்மார்ட்போன் விற்பனையில் இறங்கியுள்ளது. அதன் படி ரூ.ரூ.3399-க்கு ஸ்மார்ட்போன் வாங்கி அதற்கு ரூ.2600 கேஷ்பேக் பெறலாம் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் இதோ...
 
அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் 65-க்கும் அதிகமான 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனோடு ஏர்டெல் நிறுவனமும் இணைந்துள்ளது. 
 
வாடிக்கையாளர்கள் 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.3399 விலையில் வாங்க முடியும். ஏர்டெல் மூலம் 35 மாதங்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரூ.600 கூடுதல் கேஷ்பேக் ரூ.169-க்கு ரீசார்ஜ் செய்து பெற முடியும்.
 
இந்த சலுகையில் சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ஹானர், எல்ஜி, லெனோவோ, மோட்டோ மற்றும் பல்வேறு இதர மாடல் ஸ்மார்ட்போன்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
ஸ்மார்ட்போன் வாங்கிய முதல் 18 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்கள் ரூ.3500 மதிப்புடைய ரீசார்ஜ்களை ஏர்டெலில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் ரூ.500 திரும்ப பெற முடியும்.
 
அடுத்த 18 மாதங்களில் ரூ.3500 மதிப்புள்ள ரீசார்ஜ் செய்து ரூ.1500 திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஏர்டெல் சார்பில் ரூ.2000 பெற முடியும்.
 
ரூ.600 கூடுதல் கேஷ்பேக் பெற ரூ.169 ரீசார்ஜ்களை செய்ய வேண்டும். இதற்கு https://www.amazon.in/hfc/mobileRecharge - முகவரியை பயன்படுத்த வேண்டும்.