வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 18 மே 2018 (15:00 IST)

பிஎஸ்என்எல் டேட்டா சுனாமி: விவரம் உள்ளே...

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிஎஸ்என்எல் ரூ.118-க்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்த நிலையில், தற்போது ரூ.98 விலையில் அடுத்த சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை பிஎஸ்என்எல் டேட்டா சுனாமி என அழைக்கப்படுகிறது. 
 
பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த சலுகையை வழங்கியுள்ளது. ரூ.98 விலையில் தினமும் 1.5 ஜிபி வீதம் மொத்தம் 39 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
மேலும், டேட்டா தவிர வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற இதர சலுகைகள் இதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதே போன்று, ஜியோ ரூ.98-க்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. ஏர்டெல் ரூ.92 விலையில் 6 ஜிபி டேட்டா 7 நாட்களுக்கு வழங்குகிறது. 
 
இதனோடு பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.99 சலுகையில் 26 நாட்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.