1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. no one came to get election application in dmdk office

விருப்பமனு வாங்க ஒருத்தரும் வரலயே!. காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம்!...

dmdk office
விஜயகாந்த் இருந்தவரை தேமுதிகவுக்கு உயிர் இருந்தது. எப்போது விஜயகாந்த் மறைந்தாரோ அப்போதே தேமுதிகவுக்கு மக்களிடம் மவுசு குறைந்துவிட்டது.விஜயகாந்த் இருந்தபோது 8 சதவீத வாக்குகள் வரை பெற்றது அந்த கட்சி. முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார் விஜயகாந்த். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுகவை விட அதிக எம்எல்ஏக்களை பெற்று எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்ந்தார் விஜயகாந்த். இதையெல்லாம் நாடு பார்த்தது..

ஆனால் உடல்நிலை காரணமாக அவரால் அரசியலில் ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. எனவே இதையடுத்து தேமுதிகவின் வாக்கு வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. இப்போது தேமுதிகவுக்கு இரண்டு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் தான் இருக்கிறது.. ஆனால், தேமுதிகவை வழிநடத்தி வரும் பிரேமலதா இன்னமும் தங்களுக்கு அதிக வாக்குகள் இருப்பது போலவே பேசிக் கொண்டிருக்கிறார்.

2026 தேர்தலை பொருத்தவரையில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளிடமுமே பேரம் பேசினார் பிரேமலதா. எங்களுக்கு 20 சீட்டுகள் கொடுக்க வேண்டும், 2 ராஜ்ய சபா சீட் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்தார். இரண்டு கட்சிகளுமே முடியாது என கைவிரித்து விட்டதும் ‘சரி.. 10 சீட்டு கொடுங்கள்’ எனக் கேட்டார். அதையும் முடியாது என சொல்லி விட்டார்கள். அதனால்தான் இதுவரை தேமுதிக எந்த கூட்டணியிலும் இணையவில்லை. இந்நிலையில்தான், சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பாக  போட்டியிட விரும்புபவர்களுக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு விநியோகம் நடைபெற்று வருகிறது..

dmdk

நான்காம் நாளான இன்று காலை முதல் பல மணி நேரம் விருப்பமனுவை வாங்க ஒருவர் கூட வரவில்லையாம். தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி கிடக்கும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலானது. கூட்டணி தொடர்பாக இதுவரை முடிவு எடுக்காததே இதற்கு காரணம் என பார்க்கப்படுகிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விஜய் 22 மணி நேரம் ரோட்டில் நடக்க ரெடி!.. பர்மிஷன் கிடைக்குமா?.. ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்..