ரூ.501-க்கு ஜியோபோன்: ரிலையன்ஸ் மான்சூன் ஆஃபர்!
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது ஜியோபோன் மற்றும் ஜியோ ஜிகா ஃபைபர் குறித்த அறிவிப்புகள் வெளியாகின.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் ரூ.1,500 செலுத்தி புதிய ஜியோபோன் வாங்கி மூன்று ஆண்டுகளில் அதனை திரும்ப வழங்கி முன்பணத்தை திரும்ப பெற முடியும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு இந்த ஜியோபோனில் பேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளை பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட இருப்பகாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஜியோ மான்சூன் ஆஃபர் என்ற பெயரில், புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதில் பயனர்கள் ரூ.501 மட்டும் செலுத்தி ஜியோபோன் பெற முடியும்.
ஆம், பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஃபீச்சர் போனினை வழங்கி, புதிய ஜியோபோனுக்கு ரூ.501 மட்டும் செலுத்தி வாங்கிட முடியும். இந்த சலுகை ஜூலை 21, 2018 முதல் துவங்குகிறது.