முதியோர் இலவச பஸ் பாஸ் பெற ஆதார் அவசியமா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முதியோர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த பாஸ் 3 மாதங்களுக்கு ஒருமுறை முதியோர்களுக்கு டோக்கன் மூலம் வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் புதிய டோக்கன் வழங்கப்படும்போது, பாஸ் பெறுபவர்கள் சமீபத்திய புகைப்படங்களை காண்பித்தால் மட்டும் போதுமானதாக இருந்தது.
இந்த நிலையில் இந்த டோக்கன்கள் மூலம் பேருந்துகளில் பிரயாணம் செய்யும்போது நடத்துனர்கள் ஆதார் அட்டையை கேட்பதாக தற்போது புதியதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இந்த இலவச டிக்கெட்டுக்களை பயன்படுத்த முடியும் என்று நடத்துனர்கள் கூறுவதாக புகார்கள் எழுந்துள்ளது
ஆனால் போக்குவரத்து கழக நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. முதியோர்கள் பஸ் பாஸ் பெறவோ அல்லது பயன்படுத்தவோ ஆதார் அட்டை அவசியம் என்று எந்த விதியும் செயல்படுத்தப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.