1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (17:09 IST)

120 கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ரைவேட் ஜெட்டை வாங்கினாரா சூர்யா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து அவர் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சூர்யா தன் மனைவி ஜோதிகாவோடும் குழந்தைகளோடும் மும்பையில் கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறார். ஷூட்டிங்கின் போது மட்டும் சென்னைக்கு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் சூர்யா 120 கோடி ரூபாய் மதிப்பில் ப்ரைவேட் ஜெட் ஒன்றை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அடிக்கடி மும்பையில் இருந்து சென்னை வந்து செல்வதால் இந்த ப்ரைவேட் ஜெட் விமானத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் சமூகவலைதளப் பக்கத்தில் பரவி சூர்யா மற்றும் ஜோதிகாவின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.