1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Rupee Hits Record Low as Stock Market Surges

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. இன்று ஒரே நாளில் 9 காசுகள் சரிந்ததால் அதிர்ச்சி..!

ரூபாய் மதிப்பு
இன்று ஒரே நாளில் ரூபாய் மதிப்பு 9 காசுகள் சரிந்து உள்ளதை அடுத்து, ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாகவே குறைந்து வரும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்துள்ளது.
 
இன்று வர்த்தக முடிவில், 85 ரூபாய் 75 காசுகள் என ஒரு அமெரிக்க டாலருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம், அதாவது டிசம்பர் 20 ஆம் தேதி, ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்தது என்பதும், அதன் பின்னர் டிசம்பர் 24 ஆம் தேதி ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இன்றும் 9 காசுகள் சரிந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில், இந்திய பங்குச் சந்தை இன்று மிக அதிகமாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்செக்ஸ் 1,400 புள்ளிகளும் நிப்டி 445 புள்ளிகளும் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?