லேட்டா வந்தாலும் லேடஸ்ட்டாய் வெளிவரும் ஹானர்!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 3 ஜனவரி 2020 (13:35 IST)
ஹானர் நிறுவனம் கூடிய விரைவில் இந்த ஆண்டிற்கான தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வுள்ளது. 
 
ஹானர் நிறுவன இந்திய தலைவர் சார்லெஸ் பெங், ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை வெளியிட்டு இருக்கிறார். ஹானர் 9எக்ஸ் வெளியீடு ப்ளிப்கார்ட் தளத்தில் டீசர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு வெளியாகி இருக்க வேண்டிய இந்த ஸ்மார்ட்போன் தாமதமாக வந்தாலும் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. ஹானர் 9எக்ஸ் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது. 
 
ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனோடு ஹானர் பிராண்டு ஹானர் மேஜிக் வாட்ச் 2, மேஜிக் புக் லேப்டாப் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :