1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Honor 20i gets big price drop in India for a limited period

அதிரடியாய் விலை குறைந்தது ஹானர் ஸ்மார்ட்போன்: உடனே முந்துங்கள்!!!

விலை குறைந்தது
ஹானர் பிராண்ட் தனது 20ஐ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரூ. 14,999 என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போன் விறப்னை செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் மீது குறுகியகால விலை குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஹானர் 20ஐ 4 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
இந்த குறுகிய கால விலை குறைப்பு நவம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
  • 6.21 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், 
  • ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் EMUI 9.0, 4 ஜிபி ராம்,
  • 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 
  • முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் 
  • 3டி லித்தோகிராஃபி கிரேடியன்ட் பேக் 
  • 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஸ்டாலினே ரூல்ஸ் போடுவாராம்; அவரே எதிர்ப்பாராம்! – விளாசிய எடப்பாடியார்!