1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (13:50 IST)

பட்ஜெட் விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

ஹானர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஹானர் 9X மற்றும் 9X ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
சீனாவை சேர்ந்த ஹூவாய் நிறுவத்தின் ஹானர் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் ஹானர் 9X மற்றும் 9X ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களில் கேமராவை தவிர மீத அம்சங்கள் அனைத்தும் பொதுவானதாக உள்ளது. 

ஹானர் 9X ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா, ஹானர் 9X ப்ரோ போனில் ட்ரிப்பிள் கேமரா உள்ளது. மிட் நைட் பிளாக், பாண்டம் ப்ளூ என இரண்டு வகையான நிறங்களில் கிடைக்கிறது.
ஹானர் 9X மற்றும் 9X ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 5.84 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் கிரின்659 பிராசஸர், மாலி T830-MP2 GPU, ஆன்ட்ராய்டு 8.0 ஓரியா மற்றும் EMUI 8.0
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா
# கைரேகை சென்சார், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
விலை விவரம்: 
1. 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி கொண்ட ஹானர் 9X விலை ரூ.14,000 
2. 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி கொண்ட ஹானர் 9X விலை ரூ.16,000 
3. 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி கொண்ட ஹானர் 9X விலை ரூ.19,000 
4. 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி கொண்ட ஹானர் 9X ப்ரோ விலை ரூ.22,000 
5. 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி கொண்ட ஹானர் 9X ப்ரோ விலை ரூ.24,000