1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 ஜூன் 2018 (14:28 IST)

ரூ.70,000 ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு: பிளிப்கார்ட் அதிரடி!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் சூப்பர் வேல்யூ வீக் விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கபப்ட்டு வருகிரது. இந்த சலுகைகல் 24 ஆம் தேதி வரை மட்டுமே. 
 
இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு வட்டியில்லா மாத தவனை, பைபேக் கேரன்டி, தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
 
முக்கியமாக ரூ.70,000 மதிப்புடைய கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனை ரூ.10,999க்கு பெற முடியும் என்று கூறினால் யாராலும் நம்ப முடியாது ஆனால், இப்போது நம்பித்தான் ஆக வேண்டும். 
 
கூகுள் பிக்சல் 2 (128 ஜிபி) ஸ்மார்ட்போனை இந்த சலுகையில் வாங்கும் போது ரூ.199 செலுத்தி பைபேக் கேரன்டி சலுகையை வாங்க வேண்டும். சிறப்பு விற்பனையில் ரூ.9,001 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.60,999-க்கு கிடைக்கிறது. 
 
அதோடு குறிப்பிட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.8,000 கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் ரூ.52,999-க்கு கிடைக்கும். 

பிளிப்கார்ட் தளத்தில் வாங்குவதால், பிக்சல் 2 ஸ்மார்ட்போனினை 6 முதல் 8 மாதங்களில் திரும்ப வழங்கும் போது ரூ.42,000 வரை எக்சேஞ்ச் பெற முடியும். அப்போது கூட்டி கழித்து பார்த்தால், ரூ.10.999க்கு ஸ்மார்ட்போன் கிடைக்கும்.