ரூ.26,000 விலை குறைந்த கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் - பிளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர்
ரூ.61000 க்கு விற்பனையாகும் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர் மூலம் 34,999 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது.
பிளிப்பார்ட்டில் மே 13-ம் தேதி முதல் மே 16-ம் தேதி வரை சிறப்பு சலுகை விற்பனை நடைபெற இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், தொலைகாட்சிகள் போன்ற பொருட்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றன.
சிறப்பு விற்பனையின் சில சலுகைகளை பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ரூ.61,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.26,001 விலை குறைக்கப்பட்டு சிறப்பு விற்பனையில் ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இனி வரும் நாட்களில் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்க பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதிரடி ஆஃபரில் பொருட்களை வாங்கிக் குவிக்க பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.