திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (11:23 IST)

ரூ.999-க்கு ரெட்மி நோட் 5: ப்ளிப்கார்ட் அதிரடி எக்சேஞ்ச் ஆஃபர்!

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி சமீபத்தில் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் மீது தற்போது எக்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. 
 
ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த எக்சேஞ்ச் சலுகை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ.11,000 வரை தள்ளுபடி பெற முடியும்.
 
ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை முறை ரூ.9,999 மற்றும் ரூ.11,999 ஆகும். 
 
எக்சேஞ்ச் ஆஃபரில் 64 ஜிபி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.11,000 தள்ளுபடியும், 32 ஜிபி மாடல் வாங்குவோருக்கு ரூ.9,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
இதேபோன்று ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் விலை ரூ.14,999 ஆகும். இதற்கு எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
 
ப்ளிப்கார்ட் தளத்தில் எக்சேஞ்ச் மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% தள்ளுபடி மற்றும் மாத தவனை முறை வசதியும் வழங்கப்படுகிறது.