செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (17:15 IST)

தங்கத்தின் தேவை 30 சதவீதம் குறையும்! தொழிலாளர்கள் பாதிப்பு !

இந்தியாவில் கொரோனாவால் தங்கத்தின் தேவை 30 சதவீதம் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் உலகமே முடங்கியுள்ளதால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட துறைகளில் தங்க ஆபரணத் துறையும் ஒன்று. நாட்டின் மொத்த உற்பத்தியில் 7 சதவீதத்தைக் கொண்டு இருக்கும் ஆபரணங்கள் துறையின் தேவையே இந்த ஆண்டு 30 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டில் தங்கத்தின் தேவை, 700 – 800 டன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் அது இன்னும் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தைப் பொறுத்த வரை முன் கூட்டியே வரி செலுத்த வேண்டி இருப்பதால் அதனை 150 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என  இந்திய வர்த்தக சபை தெரிவித்துள்ளது.