1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin questions Edappadi Palanisamy

ஏன் இந்த திடீர் மாற்றங்கள்? கருத்தாய் பேசும் ஸ்டாலின்!!

தமிழகம்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒதுக்கப்பட்டத்தை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்த போது நோயாளிகளின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனித்து வந்தார். அவரது செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் ஓரங்கட்டப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் முன்னிறுத்தப்பட்டார்.
 
இதனிடையே கடந்த இரு தினங்களாக அவருக்குப் பதில் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையியில், மக்களை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பேரிடர் பிரச்னையில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒதுக்கப்பட்டார் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
 
இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, மக்களை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பேரிடர் பிரச்னையில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒதுக்கப்பட்டார். பின்னர் சுகாதார செயலாளரை முன்னிலைப்படுத்திய நிலையில் அவரையும் பிறந்தள்ளி, தலைமை செய்லாளரையே தனது செய்தி தொடர்பாளராக மாற்றி அரசியல் செய்து வருகிறார் முதல்வர் என குற்றம்சாட்டியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். 
அடுத்த கட்டுரையில்
ஊரடங்கை நீட்டிக்க ஏன் தயக்கம்? எடப்பாடியாரை வறுத்து எடுத்த ஸ்டாலின்!!